வரவேற்கிறோம்
"ஜோதி கலைத்தமிழ் சிலம்பாலயம்".

பெயர் காரணம்: "ஜோதி கலைத்தமிழ் சிலம்பாலயம்".
*ஜோ - தகப்பனார் மற்றும் மகா குருவின் பெயரின் முதல் எழுத்து,
*தி - தன்னுடைய பிறந்த மண்ணின் ஊரான திருப்பூர்,
*கலை - கலைப்பற்றின் காரணமாக,
*தமிழ் - மொழிப்பற்றின் காரணமாக,
*சிலம்பம் - சிலம்பம் தான் என் உயிர் மூச்சு ,
*ஆலயம் - தெய்வீக பயிற்சியை மேற்கொள்ள புனிதமான இடத்தை கொண்டது.

விளக்கம் ; திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது, நமது ஜோதி கலைத்தமிழ் சிலம்பாலையம் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ ,மாணவிகள் , ஆண்கள் ,பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவருக்கும் நமது பயிற்சி மையத்தின் ஆசான்கள் மற்றும் பயிற்சியாளர்கள் சிலம்பத்தைப் பயிற்சி அளித்து வருகின்றனர்....

0

மாணவர்கள்

0

பயிற்சியாளர்கள்

0

விருதுகள்

0

அனுபவ ஆண்டுகாலம்

சிலம்பத்தின் வரலாறு

  • சிலம்பம் என்ற பெயர் சிலம்பு என்ற வார்த்தையில் இருந்து உருவானது. சிலம்பு என்பதற்கு 'ஒலித்தல்' என்று பொருள். சிலம்பம் ஆடும்போது உருவாகும் ஒலிகளை குறிக்கும் விதமாக சிலம்பம் என்ற பெயர் சூட்டபட்டதாகச் சொல்லபடுகிறது. "சிலம்பம்" என்ற சொல் "சிலம்பல்" என்ற வினையின் அடியாகப் பிறந்தது. மலைப் பகுதிகளில் அருவி விழும் ஓசை, பறவைகளின் கீச்சொலி, மரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசை, விலங்குகளின் இரைச்சல் போன்ற பல ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்பதால் மலைக்கு, "சிலம்பம்" என்ற மற்றொரு பெயரும் உண்டு. எனவே, மலை நிலக் (குறிஞ்சி) கடவுளான முருகனுக்கும், "சிலம்பன்" என்ற பெயருண்டு.

பழமொழிகள்